மானிய விலை சிலிண்டர் 12-ஆக அதிகரிப்பு!!மானிய விலை சிலிண்டர் 12-ஆக அதிகரிப்பு!! ... இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.62 இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.62 ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ59 மற்றும் ஏ28 அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2014
14:26

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் புதிய மொபைல் போன்கள் இரண்டினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Micromax Bolt A59 மற்றும் Micromax Bolt A59 28 என இவை அழைக்கப்படுகின்றன. போல்ட் 59, ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1 சிஸ்டத்திலும், போல்ட் 28 ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டத்திலும் இயங்குகின்றன. ஏ59 போனில், 2 மெகா பிக்ஸெல் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் உடன் தரப்பட்டுள்ளது. இன்னொரு கேமராவும் முன்புறம் கிடைக்கிறது.

இதன் மற்ற அம்சங்கள்:

3.5 அங்குல திரை, கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1 கிகா ஹெர்ட்ஸ் வேக இயக்கம் கொண்ட ப்ராசசர், இரண்டு சிம் பயன்பாடு, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை-பி, புளுடூத், மைக்ரோ யு.எஸ்.பி. கார்ட் ஸ்லாட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 256 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். போனின் தடிமன் 10 மிமீ ஆகும். இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது.

போல்ட் ஏ28 மேலே சொல்லப்பட்ட திரை, ப்ராசசர் கொண்டுள்ளது. இதன் இரண்டு கேமராக்களும் 0.3 எம்.பி. திறன் கொண்டவையாக உள்ளன. இதன் தடிமன் 12.5 மிமீ. எடை 89 கிராம். மேலே சொல்லப்பட்ட மெமரி சிப்கள் தரப்பட்டாலும், இதன் ஸ்டோரேஜ் மெமரியை 32 ஜிபி வரை மட்டுமே அதிகப்படுத்த முடியும். இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 59 கிரே கலரில் வருகிறது.இதன் அதிக பட்ச விலை ரூ.4,542. போல்ட் ஏ 28 கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,674.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)