பதிவு செய்த நாள்
21 ஜன2014
16:58

மும்பை : வாரத்தின் முதல்நாளை தொடர்ந்து, இரண்டாவது நாளும் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. நேற்று சென்செக்ஸ் 142 புள்ளிகள் ஏற்றம் பெற்ற நிலையில் இன்று மேலும் 46 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் உயர்வு, ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் பணக்கொள்கை வெளியீட்டில் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்ற கணிப்பு, முக்கிய துறை நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியது மற்றும் இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 46.07 புள்ளிகள் உயர்ந்து 21,251.12-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 9.85 புள்ளிகள் உயர்ந்து 6,313.80-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 15 நிறுவன பங்குகளின் விலை சரிந்தும் முடிந்தன. குறிப்பாக வங்கி மற்றும் ஆட்டோமொபைல் தொடர்பான பங்குகளின் விலை உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|