தங்கம் விலை ரூ.40 குறைந்ததுதங்கம் விலை ரூ.40 குறைந்தது ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.66-ஆனது ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.66-ஆனது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பேட்டரி பாதுகாப்பில் கவனம்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2014
12:41

வார இறுதி நாட்களில், வீட்டில் இருப்பவர்களும் சற்று ஓய்வாக இருந்தால், பிளான் பண்ணி விடுவோம்... எங்காவது கண்ணுக்கு இனிய பிரதேசங்களுக்கு சென்று, மொபைல் போனை ”சுவிட்ச் ஆப் பண்ணி வைத்து விட்டு, 'ரிலாக்ஸ்' ஆக இருக்கலாம் என்று தோன்றும். இரண்டு, மூன்று நாட்கள் தங்கி, பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், வசதி படைத்தவர்கள் சொந்த வாகனத்தையும், நடுத்தர மக்கள், வாடகை வாகனத்தையும் எடுத்துக் கொண்டு பயணிப்பது, கட்டாயமாக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி போன்ற சமயங்களில், வாகனங்கள் வால் பிடித்து செல்வதே இதற்கு சான்று. அப்படி செல்லும் போது, பல்வேறு விஷயங்களை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம். பயணத்தில் மட்டுமே குறியாக இருந்துக் கொண்டு, அதையெல்லாம் ஓட்டுநர் பார்த்துக் கொள்வார் என்று அசட்டையாக இருந்து விடக் கூடாது.

கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தில் டயரை பரிசோதிப்பது அவசியம். தேவைப்பட்டால் மாற்றிவிடுங்கள். வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் துருப்பிடிக்காமல் இருக்க, பேட்டரியின் முனைகளில், கிரீஸ் தடவி வைக்கலாம்.

வண்டியில் ஏதாவது உதிரி பாகம் பழுதடைந்து விட்டால், தரமான நிறுவனத்தின் தயாரிப்புகளை மட்டுமே வாங்கி பயன்படுத்தினால் நல்லது. உங்கள் வாகனத்தை, தொடர்ந்து, ஒரே மெக்கானிக்கிடம் கொடுத்து சர்வீஸ் செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வண்டியில் இருக்கும் அனைத்து பிரச்னையும், அந்த மெக்கானிக்குக்கு தெரிந்திருக்கும். உங்கள் வாகனத்தை வேறு யாராவது ஓட்டுவதாக இருந்தால், அதில் இருக்கும் குறைகளையும், பிரச்னைகளையும் முன்கூட்டியே கூறிவிடுங்கள். வாகனத்தில் முதலுதவி சாதனம் என்பது கட்டாயம். குழந்தைகளும் வாகனத்தில் வருவதாக இருந்தால், அவர்களை முன் பக்க இருக்கையில் அமர்த்துவதை தவிர்த்து விடுங்கள். பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பயணப் பட்டியலில், முதியவர்களும் இடம் பெற்றிருந்தால், அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)