பதிவு செய்த நாள்
23 ஜன2014
12:47
மஹிந்திராவின் எக்ஸ்யுவி, 500 அறிமுகப்படுத்தப்பட்ட 27 மாதங்களில், 75 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கை விற்கப்பட்டுள்ளது என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக விருதுகளை வென்ற, எஸ்யுவி இது என்பதும், இதுவரை, 25க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
போக்ஸ்வேகன் தங்களின் பீட்டில், ட்யூன் கான்செப்ட் காரை 2014 டெட்ராய்ட் மோட்டார் ஷோவில், காட்சிக்கு வைக்கிறது. நிறைய க்ராஸ்ஓவர் அம்சங்களுடன், 207 பிஎச்பி கொண்ட 2 லிட்டர் டர்போசார்ஜட் 4 சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ள இந்த கார் வணிக உற்பத்திக்கு வரமா, என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
டொயோட்டா தங்களின், 2014 ஈட்டியோஸ் செடான் மற்றும் ஈட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஜி மற்றும் ஜிடி வேரியன்ட்களில், ட்யூவல் இன்ட்டீரியரை சேர்த்துள்ளது. மேலும், இரண்டு புதிய தேர்வாக விடி மற்றும் விடி(5பி) என்ற ட்ரிம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|