தங்கம் விலை ரூ.40 குறைந்ததுதங்கம் விலை ரூ.40 குறைந்தது ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.66-ஆனது ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.66-ஆனது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடாவின் புதிய நானோ டுவிஸ்ட் - ஒரு பார்வை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2014
14:49

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தற்போது பயன்பாட்டில் உள்ள நானோ ரக கார்களில் புதிதாக டுவிஸ்ட் மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள "எலக்ட்ரிக் பவர் அசிஸ்டட் ஸ்டீயரிங் சிஸ்டம்' நெருக்கடிமிக்க கடினமான சாலைகளிலும், பார்க்கிங் செய்யும் போது எளிதாக திருப்புவதற்கும் உதவுகிறது. "குரோம் அக்சன்ட்டுடன் சிக்னேச்சர் டாம்சன் பர்பிள் கலர்', புதிய உள் அலங்காரமும், சிறப்பம்சங்களும் ஓட்டுவதற்கு புதிய அனுபவத்தை தருகிறது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள "பிரஷ்லெஸ் மோட்டார்' காரின் உட்புற பாகங்களை உறுதிபடுத்துகிறது. டுவிஸ்டில் உள்ள இ.பி.எ.எஸ் சாதனம் சக்கரம் விடுபட்டவுடன் ஸ்டியரிங்கை நேர்நிலைக்கு திருப்ப உதவுகிறது. புதிய டிரைவர் தகவல் சாதன முறை, இரவு நேர ஆம்பர் டிஸ்பிளே, டிஜிட்டல் கடிகாரம், புளுடூத், கீ லெஸ் என்ட்ரி, மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது முன்பு இருந்த நானோ எல்.எக்ஸ் மாடலுக்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வர்த்தக யூனிட் தலைவர் ரஞ்சித் யாதவ் கூறுகையில் "" நானோ துவங்கிய நாள் முதல் புரட்சிகரமான கண்டுபிடிப்பாக இருந்து வருகிறது. மேலும், இப்பிரிவின் மதிப்பிற்கு முதன்மை அளிக்கும் வகையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை எதிர் நோக்கும் எங்களது மைய குறிக்கோளுடன் இதன் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.

எங்கள் கூட்டாண்மை நிறுனவங்களுடன் இணைந்து அதி சிறந்த தொழில் நுட்பம், வடிவமைப்பு பொறியியல் அமைப்புடன் நானோ டுவிஸ்டை தயாரித்துள்ளோம். பல வித கலர்களில் பார்க்க கண்கவரும் டுவிஸ்டை "ஸ்மார்ட் சிட்டி கார்' என கூறலாம்.'' என்றார்.

புதிய நானோ டுவிஸ்ட் எக்ஸ்.டி., விலை ரூ.2.36 லட்சம். அங்கீகாரம் பெற்ற டீலர்களிடம் சில மாதங்களில் வாங்கலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)