பதிவு செய்த நாள்
24 ஜன2014
10:03
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் சில தினங்களாக சரிவு காணப்படுகிறது. அந்த சரிவு இன்றும்(ஜனவரி 24ம் தேதி) தொடர்ந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிந்து மீண்டும் ரூ.62-ஐ தாண்டி ரூ.62.13-ஆக இருந்தது. தொடர்ந்து சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் 73 காசுகள் சரிந்து ரூ.62.66-ஆக முடிந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.61.93-ஆக இருந்தது.
உள்நாட்டு சந்தையில் காணப்படும் சரிவு, உலகளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து இருப்பது மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு ரூபாயின் மதிப்பு இந்தளவு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|