தங்கம் விலை ரூ.56 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.56 உயர்ந்தது ... "சேவை வரி வசூல் திட்டத்தால் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும்'   "சேவை வரி வசூல் திட்டத்தால் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும்' ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சொகுசோ, செயல்திறனோ, சிக்கனமோ... மஹிந்திரா எக்ஸ்யுவி 5ஓஓ (எக்ஸ்யுவி 500)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2014
13:54

மஹிந்திரா நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தி, 15 லட்ச ரூபாய்க்கு குறைவான எஸ்யுவி செக்மண்ட்டில், வெற்றி நடை போடச் செய்தது தான் மஹிந்திரா எக்ஸ்யுவி 500.

பொலிரோ, ஸ்கார்பியோ, ஜைலோ போல எக்ஸ்யுவி 5ஓஓ என்று ஓவில் முடியும் பெயர் கொண்டதாகும் (பலரும் இதை ஐநூறு என்று நினைத்திருக்கலாம்) எக்ஸ்யுவி, 500 மேலும் மெருகூட்டப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களை மேலும் திருப்திபடுத்த கடந்த ஆண்டு மறு அவதாரம் எடுத்து வந்தது. விலைக்கேற்ற மதிப்பில், பலவித வியப்பூட்டும் அம்சங்களுடன், தோற்றத்தில் சிற்சில மாற்றங்களுடன் புதிய எக்ஸ்யுவி, 500 கம்பீரமாகவே காட்சியளிக்கிறது.

எக்ஸ்யுவின் சிறப்பம்சங்கள்:

முதல் மற்றும் இரண்டாவது வரிசை சீட்கள், நல்ல தரமான இடவசதியுடன், காருக்குள் ஏற வேண்டாம். அப்படியே நடந்து சென்று அமரலாம் என்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. நகர போக்குவரத்திலும், நகரத்தின் சிறுசிறு சந்துகளில் சென்று வருவதிலும் சரி, நீண்ட நெடுஞ்சாலை பயணமானாலும் சரி எளிதாக கையாளும் வகையில், பயணத்தை இனிமையாக்குகிறது எக்ஸ்யுவி 500.

இதை ஓட்டும் போது, "பாடி ரோல்' இல்லை என்பதும் கையாளும் போது, ஸ்திரத்தன்மையை உணரமுடிவதும், எக்ஸ்யுவி யின் வெற்றியாகும். பாதுகாப்பிற்கென, 6 ஏர்பேக்கள், "ரோல் ஓவர் மிடிகேஷன் கொண்ட இஎஸ்பி, இபிடியுடனான ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் எல்லாச் சக்கரங்களுக்கும், டிஸ்க் ப்ரேக் என்று எக்ஸ்யுவி சிறப்பான, சுகமான அதேநேரம் பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது. இதன் டாப் என்ட்டில் ஆல் வீல் ட்ரைவ் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எக்ஸ்யுவியின் வெளித்தோற்றம்

சாலையில் இதன் இருப்பு பலரின் கவனத்தையும் கவருகிறது. கம்பீரமாகவும், அதேநேரம் சற்றே அடக்கமாகவும் தோற்றமளிக்கும், எக்ஸ்யுவியின் சற்றே பின்புறம் சரிந்த வடிவமைப்பு, அதன் அழகை மேலும் கூட்டுகிறது. அகலமான கதவும், ஜன்னல்களும் விஸ்தார உணர்வை கூட்டுகிறது. இதன் எல்இடி ஆட்டோ ஹெட்லேம்ப் அழகான வடிவமைப்பில், சிறப்பான செயல்பாட்டுடன் உள்ளது. இதன் பெரிய விண்ட் ஷீல்டை முழுவதுமாய் சுத்தப்படுத்த உதவுகிறது இதன் ட்வின்ஸ்டெம் வைப்பர். 200 மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ரூப் கேரியர் பொருட்கள் எடுத்துச்செல்ல உதவுவதுடன் பார்க்கவும் அழகாக இருக்கிறது.

உட்புறம்

ஐரோப்பிய கார்களின் சொகுசையும், தரத்தையும் இதன் உட்புற வடிவமைப்பில் காண முடிகிறது. இருக்கைகள் அமர்ந்திருப்பவர்க்கு, வீட்டு சோபாவில் அமர்ந்திருக்கும் உணர்வை அளிக்கிறது. (குறிப்பாக முன்சீட்கள்) ப்ளாக் சீப்ளம் ட்யூவல் டோன் கேபிள் மிக நேர்த்தியாக உள்ளது. சென்டர் கன்சோல் மேலிருந்து கீழ்நோக்கி, சரிவாய் வழிவது போல் கொடுக்கப்பட்டிருப்பதும், டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேயும், மியூசிக் சிஸ்டமும் சிறப்பாக உள்ளது. இதன், "ஏசி' முன் மற்றும் பின்புறங்களில் விரைவாய் பரவி உறைய வைக்கும், குளிர்ச்சியுடன் சிறப்பாய் இயங்குகிறது. ஸ்டியரிங் வீல் கனகச்சிதமாய் கைப்பிடிக்குள் அடங்குகிறது. க்ரூலிஸ் மற்றும் வாய்ஸ் கன்ட்ரோல் பட்டன்கள், ஸ்டியரிங்கின் வலதுபக்கமும், ஆடியோ கன்ட்ரோல் இடது பக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. க்ளவ் பாக்ஸ் கன்சோலில் இரண்டு அடுக்குகளாக கொடுக்கப்பட்டுள்ளதும், இருக்கைகள் நடுவே கொடுக்கப்பட்டுள்ள க்ளவ் பாக்சும் வசதியாக இருக்கிறது.

முன்பக்க சைட் மிரரை திறந்தவுடன் ஒளிரும் விளக்கு தேவையான யுக்திதான். டோர் ஹேண்டில் அருகில் இருக்கும், "லவுன்ஜ் லைட்' கேபினுக்குள் மிதமான வெளிச்சத்தையூட்டி அழகாக்குகிறது. டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மூலம் எரிப்பொருள் பற்றிய விவரம், டயர் அழுத்தம் பற்றிய விவரம், ரிவர்ஸ் கேமரா, எச்சரிக்கை தகவல்கள், சர்வீஸ் பற்றிய விவரங்கள் எல்லாமே கிடைக்கிறது.

செயல்திறன்: இதன் 2.2 லிட்டர் காமன் ரெயில் டீசல் இன்ஜின் 140 பிஎச்பி (3750 ஆர்பிஎம்) பவரையும் 330 என்எம் (1600 ஆர்பிஎம்மிலேயே) டார்க்கையும் வழங்குகிறது. 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டு இயங்கும் இந்த எஸ்யுவியில் முதல் முறையாக மஹிந்திரா இன்ஜினை குறுக்காக பொருத்தியுள்ளது.

"டர்போ லேக்' மிகக்குறைவாக இருப்பதுடன் 1200 ஆர்பிஎம்மிலேயே முழு பவரையும் உணரும் வண்ணம் அநாயசமாக பறக்கிறது எக்ஸ்யுவி 500 முதல் மற்றும் இரண்டாம் கியரின் விகிதம் குறைவாக இருப்பது நகரச்
சாலைகளில் ஓட்டவும், கியரை குறைக்காமல் சிறு சாலைகளில் புகுந்து செல்லவும் சுலபமாக இருக்கிறது.

நான்காம் கியரிலேயே மணிக்கு, 150 கி.மீ., வேகத்தை சிரத்தையின்றி அடையமுடிவதும் குறிப்பிடத்தக்கது. சுகமான பயணம், சுலபமாக கையாளக் கூடியது மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இதன் மோனோகாக் வடிவமைப்பை காரணமாகக் கூறலாம். மஹிந்திரா தன் போட்டி நிறுவன வாகனங்களின் சிறப்புக்களை எல்லாம் கருத்தில் கொண்டு எக்ஸ்யுவி, 500 வில் கொண்டு வர முயன்றிருக்கின்றனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் என்றே கூற வேண்டும்.

தொடர்புக்கு: 98947 07000

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)