தமிழக அரசின் அலட்சியத்தால் கர்நாடகம் செல்கிறது ரூ.70 கோடிதமிழக அரசின் அலட்சியத்தால் கர்நாடகம் செல்கிறது ரூ.70 கோடி ... மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது -ஆதார் அட்டையும் அவசியமில்லை மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது -ஆதார் அட்டையும் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வைப்பர்கள் அழகுக்கும் பாதுகாப்பிற்குமான கவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2014
14:49

கார் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் சாதனம் வைப்பர் என்று அழைக்கப்படுகிறது. நம் உடலுக்கு எப்படி முகமோ அப்படிதான் காருக்கு அதன் முன்பக்க கண்ணாடி. அது சுத்தமாக இருந்தால்தான் காரின் அழகு முழுமையடையும். அழகுக்காக மட்டுமல்ல, காரின் கண்ணாடி சுத்தமாய் இருப்பது பாதுகாப்பான பயனத்திற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய முதல் ஏற்பாடாகும். நாம் எவ்வளவுதான் துடைத்து சுத்தமாக வைத்துக்கொண்டு கிளம்பினாலும், பயணத்தின்போது காற்றில் உள்ள தூசு, குப்பை, மழைநீர் என்று அதில் கறை படிவதை தடுக்க முடியாது, அப்படி படியும்போது அது ஓட்டுனர் பாதையை பார்ப்பதற்கு இடையூராக இருக்கும். எனவே அவற்றையும் உடனுக்குடன் அகற்றி கண்ணாடியை சுத்தமாக்க வைப்பர்கள் பயன்படுகின்றன.

வைப்பர்கள் ஒரு மோட்டாருடன் இணைக்கப்பட்ட நாம் கையில் துடைப்பதுபோல சுத்தமாகவும், அதே சமயம் சீராகவும் கண்ணாடியை துடைத்து சுத்தம் செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கும். சில சமயம் , கண்ணாடியில் சில கடுமையான கறைகள் படிந்திருக்கும், அப்போது, தண்ணீருடன், கண்ணாடியை சுத்தம் செய்ய பயன்படுத்தபடும் திரவம், (சால்வண்ட்)சேர்த்து, கண்ணாடியில் ஸ்ப்ரே செய்து வைப்பர் உபயோகித்து துடைக்கக்வேண்டிருக்கும். பெரும்பாலும் எல்லா வாகனங்களிலும் இந்த விண்ஷீல்ட்டு(கண்ணாடி) வைப்பர்கள் கட்டாயம் இடம்பெறும் ஒரு அம்சமாக இருக்கிறது.

வைப்பர்களின் இயங்கும் முறை

வைப்பர்கள் ஒரு மெட்டல் கம்பியில் நடுவிலும், ஒரு முனையிலுமாக இரு இடங்களில் துளையிட்டு அதில் இணைக்கப்பட்டிருக்கும். அந்த மெட்டல் கம்பி ஒரு இணைப்பான் மூலம் 12 வோல்ட் திறன் கொண்ட ஒரு மின்மோட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வைப்பர் மோட்டார்களில் ஆர்மெச்சூர், பார்க் மெக்கானிசம், மற்றும் மோட் செலக்டாரை கட்டுப்படுத்தும் எலக்ட்ரானிக்கும் இருக்கும். மோட் செலக்டார் என்பது, பார்க், வேகம், அதாவது மூன்று முதல் ஐந்து விதவிதமான வேகக்கட்டுபாடு, மற்றும் பல்ஸ் மோட் ஆகும். இந்த மோட்களை இயக்க ஒரு எலக்ட்ரானிக் சுவிட்ச் கொடுக்கப்பட்டிருக்கும். இது அதிவேகமான இயக்கத்திலிருந்து, 30 நொடிக்கு ஒரு முறை என வைப்பர்களில் செயல்பாட்டை தீர்மானிக்கும். பல்ஸ் என்பது வைப்பர்கள் கீழே படுத்திருக்கும் நேர அளவை குறிக்கும்.

நம் தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல இந்த வைப்பர்களில் வேகத்தையும் கால அளவையும் அதாவது அதன் பல்சையும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சில வண்டிகளில் பின்பக்க கண்ணாடிக்கும் வைப்பர்கள் பொருத்தப்பட்டிருக்கும். தற்போது, வரும் புதிய வாகனங்களில் ஆட்டோமேட்டிக் ரெயின் சென்சிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், விண்ஷீல்டில் படும் மழையில் அளவை உணர்ந்து அதற்கு தக்கப்படி, வைப்பர் செயல்பட வேண்டிய மோட்டை தானாகவே தேர்ந்தெடுத்துக்கொள்ளும். இது ஓட்டுனருக்கு மழையின்போது வைப்பரின் சுவட்சை தேடி சிரமப்படாமல் சாலையில் கவனம் செலுத்த உபயோகமாக வசதியாக இருக்கும்.

வைப்பர்களில் பிரச்னை ஏற்பட்டால் :

வைப்பர்கள் வேலை செய்வதை நிறுத்தினால் முதலில் அதன் பியூஸை சோதனை செய்யவேண்டும். தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைக்கும் மாற்று சாதனத்தையே எப்போது பயன்படுத்துங்கள். சில சமயம் வைப்பர் மோட்டார் ஒழுங்காக இயங்கும், ஆனால் வைப்பர் கண்ணாடியை துடைக்காமல் அமைதியாக படுத்துகிடக்கும். இதுபோன்ற சமயங்களில் வைப்பர் கம்பிகளை மோட்டாருடன் இணைக்கும் பாகங்களில் ஏதேனும் தொடர்பு விடுபட்டுள்ளதா என்று ஆராய வேண்டும். அப்படி விடுபட்டிருப்பின் அதை உடனே கழட்டி சரிசெய்து பின் மாட்டிவிடுங்கள். அதேபோல் வைப்பர் பிளேடுகளை மாற்றுவது மிகவும் சுலபமான வழிமுறைதான், ஒரு சிறிய க்ளிப்பை கழட்டி மாட்டுவதன் மூலம் இதனை செய்துவிடலாம்.

எப்போதும் வைப்பர்களை 6 மாதங்களுக்கு ஒருமுறையேனும் மாற்றுவது சிறந்தது. வைப்பர்களில் க்ராக்குகள், ஏற்பட்டாலோ, அல்லது அவை இணைக்கப்பட்டிருக்கும் மெட்டல் கம்பிகளில் இருந்து தனியாக வந்திருந்தாலோ அதை உடனே கவனித்து சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் கம்பிகள் கண்ணாடியை பதம்பார்த்துவிடும். வைப்பர்களை பரிசோதித்து வைத்துக்கொள்வதுபோலவே சுத்தம் செய்ய பயன்படும் சால்வண்ட் திரவம் சேமிக்கப்பட்டிருக்கும் டாங்கையும் அவ்வப்போது பார்த்துவைத்துக்கொள்ளவேண்டும். ஏனேனில் வைப்பர்கள் கண்ணாடிமேல் சுலபமாக சென்று வர இந்த திரவமே பயன்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)