தமிழக அரசின் அலட்சியத்தால் கர்நாடகம் செல்கிறது ரூ.70 கோடிதமிழக அரசின் அலட்சியத்தால் கர்நாடகம் செல்கிறது ரூ.70 கோடி ... மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது -ஆதார் அட்டையும் அவசியமில்லை மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது -ஆதார் அட்டையும் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கம்பாக்ட் ஹாட்ச்பேக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2014
15:08

இந்திய கம்பாக்ட் ஹாட்ச்பேக் ரக வாகனங்களின் தொகுப்பில், ஓர் அடித் தளத்தை அமைத்த பெருமை மாருதியையே சாரும். மிக குறைவான காலத்தில், 10 லட்சம் கார்களை விற்று, விற்பனையில் சாதனை படைத்தது. ஸ்விப்ட் இந்தியாவில், ப்ரீமியம் ஹாட்ச்பேக் ரக கார் பிரிவில், ஒரு புதிய வரைமுறையை உருவாக்கியது. இவ்வாகனம் மேம்பட்ட சேசிஸ் ட்ரான்மிஷன் மற்றும் சஸ்பென்ஷன் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது, 21 இந்திய வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்களை கொண்டு தரம், பாணி, வடிவமைப்பு என்று, பல அம்சங்களை அடிப்படையாக வைத்து ஆராயப்பட்டு, ஹாட்ச்பேக் ரக கார் வரிசையில், ஒரு சிறந்த பரிமாணமாக உருவாக்கப்பட்டது.

இந்த வாகனத்தில் உள்ள இன்ஜின், இந்தியாவின் அதிக ஆற்றல் கொண்ட டீசல் இன்ஜின் ஆகும். இதன், 1.3லி., சி.ஆர்.டி.ஐ., தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட டீசல் இன்ஜின் இவ்வாகனத்தை திரும்பிப் பார்க்க வைத்து, ஒரு தனி பாரம்பரியத்தையே உருவாக்கியது. "கே' சீரிஸ், 1.2 லி., பெட்ரோல் இன்ஜின் அதிக மைலேஜ் திறனிற்காக வடிவமைக்கப்பட்டதாகும். அதே சமயத்தில், இந்த இன்ஜின் ஓட்டுனர்களுக்கு, சிறந்த அனுபவத்தையும், அளிக்கிறது.

ஸ்விப்ட், 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று வரை கிட்டத்தட்ட, எட்டு ஆண்டுகளுக்கு மேல் சாதனை படைத்து வருகிறது. மாருதி 800, அல்டோ, ஓம்னி, வேகன் ஆர், ஹுண்டாய் சான்ட்ரோ மற்றும் டாட்டா இண்டிகாவை விட, அதிக வேகத்திறன் கொண்ட வாகனமாகும். ஸ்விப்ட் பல விருதுகளை பெற்றதுமில்லாமல், ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை தனக்குரியதாக்கியது. இன்று, நாட்டிலேயே விற்பனையில், இரண்டாவது இடத்தை அடைந்ததுமில்லாமல், 2லட்ச ஸ்விப்ட் கார்களை, ஓராண்டு காலத்தில் விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த கார்,"பி'செக்மென்ட் வாகன சந்தையில், 24 சதவீத பங்கை பெற்று மகிழ்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் - டிசம்பர் 2013 கால கட்டத்தில், 1.4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்விப்ட் கார்களை விற்பனை செய்தது. இது சென்ற ஆண்டை விட, 13.7 சதவீதம் அதிகமாகும்.

இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட வாகனம், தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு மேம்பட்ட மற்றும் நவீன மாற்றங்களை ஸ்விப்ட் கார் மேலும் துரிதப்படுத்துகிறது. இவ்வாகனத்தின் அணுகுமுறை, கவர்ச்சியான தோற்றம், சிறந்த செயல்திறன் போன்ற சிறப்பம்சங்கள், இவ்வாகனத்தை தனித்து நிற்க வைக்கிறது. இந்த புதிய ரக ஸ்விப்டின் தோற்றம் மக்களை பரவசமடைய வைக்கிறது. நீங்கள் புதிய ஸ்விப்டை முன் வந்த வடிவமைப்புகளை விட, அதிக வேகம் செல்லும் வாகனம் என்று, வாகனத்தை ஓட்டுவதற்கு முன் உணர்வீர்கள். அனைவரும் வந்து இந்திய வாகனத் துறையின் சிறந்த மற்றும் அழகான படைப்பான ஸ்விப்டை ரசிக்குப்படி அழைக்கிறோம். தாங்களும், ஸ்விப்ட் குடும்பத்தின் ஒரு அங்கமாக வந்து சேர அழைக்கிறோம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)