பதிவு செய்த நாள்
04 பிப்2014
15:20

புதுடில்லி:மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் சுத்த தங்கத்தின் மதிப்பை, 404 டாலராக குறைத்துள்ளது. இது, இதற்கு முன்பாக, 407 டாலராக இருந்தது. சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, மத்திய அரசு, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, இறக்குமதி செய்யப்படும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மதிப்பை மாற்றி அமைத்து வருகிறது. இந்த மதிப்பின் அடிப்படையில்தான், இறக்குமதியாகும் பொருட்களின் மீது சுங்கவரி விதிக்கப்படுகிறது. கணக்கீட்டு காலத்தில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பு, 663 டாலரிலிருந்து, 635 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒருடன் தாமிர கழிவின் மதிப்பு, 3,995 டாலரிலிருந்து, 3,959 டாலராகவும், ஒரு டன் கச்சா சோயா எண்ணெயின் மதிப்பு, 877 டாலரிலிருந்து, 857 டாலராக குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும், சுத்திகரிக்கப்பட்ட ஒரு டன் பாமாயிலின் மதிப்பு, 902 டாலரிலிருந்து, 898 டாலராகவும், ஒரு டன் கச்சா பாமாயிலின் மதிப்பு, 877 டாலரிலிருந்து, 857 டாலராகவும் குறைக்கப்பட்டுள்ளன. லண்டன் சந்தையில் நேற்று, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 0.33 சதவீதம் குறைந்து, 1,241.80 டாலராகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை, 0.23 சதவீதம் குறைந்து, 19.12 டாலராகவும் சரிவடைந்தன.
மத்திய அரசின் கட்டுப்பாடுகளால், நாட்டின் தங்கம் இறக்குமதி, நடப்பு நிதியாண்டி 500 டன்னுக்கும் குறைவாக இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.இது, கடந்த நிதியாண்டில், 845 டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|