பதிவு செய்த நாள்
04 பிப்2014
17:06

மும்பை : கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு இன்றைய வர்த்தகத்தில் 20 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்ற சென்செக்ஸ், வர்த்தகநேர இறுதியில் மீண்டது. இருப்பினும் நிப்டி சிறிய சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 2.67 புள்ளிகள் உயர்ந்து 20,211.93-ஆகவும், நிப்டி 0.90 புள்ளிகள் சரிந்து 6,000.90-ஆகவும் முடிந்தன.
வங்கி மற்றும் ஐ.டி.தொடர்பான பங்குகள் விலை உயர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள் பின்னர் மீண்டன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் பார்தி ஏர்டெல், எஸ்.பி.ஐ. டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ்., இன்போசிஸ் உள்ளிட் 16 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் மற்ற 13 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், டாடா பவர் பங்குகள் விலை மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|