பதிவு செய்த நாள்
04 பிப்2014
23:40

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சாதகமற்ற சர்வதேச நிலவரங்கள், ஸ்திரமற்ற அரசியல் தன்மை மற்றும் முதலீட்டாளர்களிடையே காணப்படும் ஆர்வமின்மை போன்றவற்றால், பங்கு வியாபாரம் மந்தமாகவே இருந்தது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. குறிப்பாக, ‘நிக்கி’ மற்றும் ஹாங்செங்’ குறியீட்டு எண்கள், 600 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.நேற்றைய வியாபாரத்தில், உலோகம், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், மருந்து உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 2.67 புள்ளிகள் உயர்ந்து, 20,211.93 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குசந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,255.52 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,963.12 புள்ளிகள் வரையிலும் சென்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், ஐ.டி.சி., சிப்லா உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், மகிந்திரா, கெயில், டி.சி.எஸ்., உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின்விலை சரிவடைந்தும், டாட்டா பவர் நிறுவன பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தன.தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 0.90 புள்ளிகள் குறைந்து, 6,000.90 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|