பதிவு செய்த நாள்
04 பிப்2014
23:42

மும்பை:நடப்பு 201314ம் நிதியாண்டில், அக்., டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், தனியார் வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், இவ்வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.தனியார் துறையில் முதலிடத்தில் உள்ள, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிகர வசூலாகாத கடன், மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலாண்டில், 0.81 சதவீதம் உயர்ந்து, 3,121 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வங்கி, இதே காலத்தில், 1,776 கோடி ரூபாய் கடன்களை மறுசீரமைத்துள்ளது.
இருந்தபோதிலும், மேலும், 3,000 கோடி ரூபாய் அளவிற்கு, மறுசீரமைப்பதற்கான கடன் உள்ளதால், அது, இவ்வங்கியின் நான்காம் காலாண்டு செயல்பாடுகளை பாதிக்கும் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மதிப்பீட்டு காலாண்டில், ஆக்சிஸ் வங்கியின் வசூலாகாத கடன், 0.09 சதவீதம் உயர்ந்து, வழங்கப்பட்ட மொத்த கடனில், 1.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், எச்.டீ.எப்.சி. வங்கியின் வசூலாகாத கடன், 0.10 சதவீதம் குறைந்து, மொத்த கடனில், 1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இதன் நிகர வருவாயில், நிகர வட்டி வருவாய், 16.4 சதவீதம் உயர்ந்து, 4,635 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. யெஸ் பேங்க், இந்தஸ் இந்த் பேங்க் போன்ற சிறிய வங்கிகளின், நிகர வட்டி வருவாயில் மிகப் பெரிய மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளன.
பொதுத் துறை வங்கிகளில் தான், வசூலாகாத கடன் அதிகம் உள்ளது. இது, தனியார் வங்கிகளையும் பாதிப்பதாக உள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|