பதிவு செய்த நாள்
04 பிப்2014
23:43

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 111.70 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இதன் உற்பத்தி, 102.50 கோடி கிலோவாக இருந்தது என, தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 57.71 கோடி கிலோவிலிருந்து, 60.78 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.இதே போன்று, மேற்கு வங்கத்தின் தேயிலை உற்பத்தி, 11 சதவீதம் அதிகரித்து, 26.20 கோடி கிலோவிலிருந்து, 29 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
தென்மாநிலங்களை பொறுத்தவரையில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 16 சதவீதம் உயர்ந்து, 16.84 கோடி கிலோவிலிருந்து, 19.59 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.நாட்டின் ஒட்டு மொத்த தேயிலை உற்பத்தியில், மேற்கண்ட மாநிலங்களின் பங்களிப்பு, 90 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|