பதிவு செய்த நாள்
04 பிப்2014
23:45

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா, சென்ற ஜனவரியில், 4.74 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.
இது, இலக்கு அளவான, 4.94 கோடி டன்னை காட்டிலும் குறைவாகும்.ஆக, மதிப்பீட்டு மாதத்தில், கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி இலக்கு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதே போன்று, 4.72 கோடி டன் நிலக்கரி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், 4.44 கோடி டன் அளவிற்கே விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், இந் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, 36.66 கோடி டன்னாக உள்ளது. எனினும், இதன் உற்பத்தி இலக்கு, 38.39 கோடி டன்னாகும்.இதே காலத்தில், இந்நிறுவனம், 38.59 கோடி டன் நிலக்கரியை விற்பனை செய்துள்ளது.
இது, இலக்கு அளவான, 40.12 கோடி டன்னை காட்டிலும் குறைவாகும்.நடப்பு 201314 ம் நிதியாண்டில், நிலக்கரி உற்பத்தி இலக்கு, 48.20 டன்னாக உள்ளது. பல்வேறு இடர்பாடுகளால், நடப்பு நிதியாண்டில்,இதன் உற்பத்தி, 50 லட்சம் டன் வரை குறைய வாய்ப்புள்ளது என, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.நர்சிங் ராவ் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|