பதிவு செய்த நாள்
07 பிப்2014
16:43

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை விலை, கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்து ரூ.30 க்கு விற்றது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு, உள்ளூர் பகுதி மற்றும் மணப்பாறையில் இருந்து எலுமிச்சை, விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோடை காலம் துவங்கும் முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், எலுமிச்சை விற்பனை சூடுபிடித்துள்ளது. இங்கு வரும் எலுமிச்சைகளை, கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். சென்ற வாரம், கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்ற எலுமிச்சை, நேற்று ரூ.30 முதல் ரூ.40 வரை விற்றது. எலுமிச்சை கடை உரிமையாளர் நடராஜ் கூறுகையில், "கடந்த ஆண்டு, எலுமிச்சை அதிகபட்சமாக, கிலோ ரூ.80 க்கு விற்றது. மழை பொய்த்துப் போனதால், இந்த ஆண்டு மேலும் விலை அதிகரிக்கும், என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|