பதிவு செய்த நாள்
07 பிப்2014
17:13

மும்பை : தொடர்ந்து நான்காவது நாளாக இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்தில் முடிந்துள்ளன. கடந்த மூன்று தினங்களில் 101 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் இன்று(பிப்ரவரி 7ம் தேதி) வாரத்தின் இறுதிநாளில் மேலும் 65 புள்ளிகள் ஏற்றம் கண்டன. அமெரிக்க மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட், சன்பார்மா உள்ளிட்ட நிறுவன பங்குகளின் ஏற்றத்தால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 65.82 புள்ளிகள் உயர்ந்து 20,376.56-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 26.90 புள்ளிகள் உயர்ந்து 6,063.20-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட், சன் பர்மா உள்ளிட்ட நிறுவன பங்குகள் நல்ல லாபம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|