தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க திட்டமில்லைதங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க திட்டமில்லை ... 11 இந்திய மொழிகளில் எஸ்.எம்.எஸ்., சேவை 11 இந்திய மொழிகளில் எஸ்.எம்.எஸ்., சேவை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி 800 கார் உற்பத்தி நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2014
16:23

இந்தியர்களின் கார்விருப்பத்தை நிறைவு செய்த மாருதி 800 வகை கார் உற்பத்தியைநிறுத்திக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிறிய வகை கார்களை உற்பத்தி செய்யும் விதமாக ஜப்பான் நாட்டை சோ்ந்த சுசூகி நிறுவனத்துடன் இணைந்து மாருதி 800 கார்கள் தயாரிக்கப்பட்டன. கடந்த 1980-ம் ஆண்டுகளில் அதன் விலை50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இதன்விலை ரூ.2.35 லட்சமாகும் எத்தனை சிறியவகை கார்கள் தற்போது உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் இந்த மாருதி800 வகை கார்களை விரும்பியவர்கள் அதிகம் பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இதன் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தப் போவதாகவும், இந்த வகை கார்களுக்கான உதிரி பாகங்கள் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகள்வரை மட்டுமே சந்தையில் விற்பனை செய்யப்படும் என மாருதி சுசூகி நிர்வாக இயக்குனர் சி.வி.ராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: நாட்டின் ஐதராபாத் பெங்களூரு, கான்பூர், புனே உள்ளிட்ட 13 நகரங்களில் மாருதி 800 கார் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அவை தற்போது முற்றிலும் நிறுத்தப்படும். தற்போதைய சூழ்நிலையில் ஆல்டோ, வேகன், ஸ்விப்ட் போன்ற பிராண்டுகளின் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் உற்பத்தியை அதிகரி்க்கச்செய்யவும் விற்பனையை அதி்கரிக்கச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள மாருதிசுசூகி டீலர்களிடம் எத்தனை 800 வகை கார்கள் உள்ளன என்றும் தெளிவாக கூறமுடியாது. இந்நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு 3 முதல்4சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறியவகை கார்களுக்கு முன்னோடி: தற்போது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டாடா நானோ, போர்டு பிகோ, வோல்க்ஸ் வேகானின் போலோ, ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ, ஐ10, ஐ20, உட்பட பல்வேறு நிறுவனங்களின் சிறிய வகை கார்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது மாருதி 800 மட்டுமே. மேலும் நடுத்தர மக்களிடம் கார்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதும் இவையே. குறைந்த அளவே காசு இருந்தால் போதும். கார் வாங்க வேண்டிய எண்ணத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலையை ஈடுகட்டியது மாருதி 800 என்றால் மிகையில்லை.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)