பதிவு செய்த நாள்
15 பிப்2014
12:13

பெங்களூரு: பார்தி ஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் முதன் முதலாக, 4ஜி மொபைல் போன் சேவையை, பெங்களூருவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: மிகத் துல்லியமான, தடங்கலற்ற வீடியோ காட்சிகளை காண உதவும், 4ஜி தொழில்நுட்பத்திலான மொபைல்சேவை, பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி போன்களை பயன்படுத்துவோர், 3ஜி சேவைக்கான கட்டணத்திலேயே, 4ஜி சேவையை பெறலாம். இதற்கு, வேறு திட்டத்திற்கு மாறத் தேவையில்லை. தற்போதுள்ள, 'சிம்' கார்டை மட்டும், மாற்றிக் கொண்டால் போதும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில், எந்த இடத்திலும், அதிவேகமான இணையதள வசதியை பெறுவதற்கு, 4ஜி தொழில்நுட்பம் உதவுகிறது. குறிப்பாக, 30 நிமிடங்களில், 10 திரைப்படங்களை பதிவிறக்கி பார்க்கும் வசதியை, ஐபோன் உரிமையாளர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்தி ஏர்டெல் நிறுவனம், ஏற்கெனவே, கடந்த 2012ம் ஆண்டு, கோல்கட்டாவில், டி.டீஎல்.டி.இ., தொழில்நுட்பத்திலான, 4ஜி சேவையை துவக்கியது. தற்போது, இந்தியாவில் பரவலாக பயன்தரக்கூடிய, 4ஜி தொழில்நுட்பத்தில் மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமும், நாடு முழுவதும், 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|