பதிவு செய்த நாள்
15 பிப்2014
16:56

புதுடில்லி: கடந்த 2013ம் ஆண்டின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கடைசி காலாண்டில், சர்வதேச அளவில், 'ஸ்மார்ட் போன்'கள் விற்பனை, 36 சதவீதம் வளர்ச்சி கண்டு, 28.20 கோடியை தாண்டியுள்ளது என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில், 'ஸ்மார்ட் போன்கள்' விற்பனைக்கென பிரத்யேக விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில், இவ்வகை போன் விற்பனை, இரண்டு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. லத்தின் அமெரிக்காவில் 'ஸ்மார்ட் போன்' விற்பனை, 96.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே போன்று, சீனாவிலும், இதன் விற்பனை, 86.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்ற ஆண்டில், ஒட்டு மொத்த அளவில், மொபைல் போன் விற்பனை, 3.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 174 கோடியிலிருந்து, 180 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், 'ஸ்மார்ட் போன்'களின் பங்களிப்பு, 53.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதாவது, இவ்வகை போன்களின் விற்பனை, சென்ற ஆண்டில், 42.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 96.80 கோடியாக அதிகரித்துள்ளது என, கார்ட்னர் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|