பதிவு செய்த நாள்
16 பிப்2014
00:21

வடமாநிலங்களில் தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும் பாசிப் பருப்பு, பயிறு ஆகியவற்றின் வரத்து அதிகரித்ததை அடுத்து, அவற்றின் விலை குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை சரிந்துள்ளது.தமிழகத்துக்கு தேவையை பாசி பருப்பு, பயிறு வகைகள், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகின்றன.வடமாநிலங்களில் நடப்பாண்டு அறுவடையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்துக்கான பருப்பு வரத்து ஜனவரி கடைசி வாரத்தில் முற்றிலும் இல்லை. இதை அறிந்த பெரிய வியாபாரிகள் அவற்றை பதுக்கியதால், அவற்றின் விலை கடும் உயர்வு ஏற்பட்டது. தற்போது அறுவடையில் ஏற்பட்ட சுறுசுறுப்பால், பாசி பயிறு, பருப்பு தமிழகத்துக்கு விற்பனைக்கு வர துவங்கி உள்ளது. சென்னை, சேலம் லீபஜார், விருது நகர் ஆகிய இடங்களுக்கு பாசி பயிறு, பருப்பு வரத்து அதிகரித்ததால், அவற்றின் விலை சரியத்துவங்கி உள்ளது.
கடந்த வாரம், பாசிப்பருப்பு முதல் ரகம் குவிண்டால், 10,900 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் குவிண்டால், 10,600 ரூபாயாகவும், பாசி பயிறு குவிண்டால், 10,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டு, முதல் ரகம் பாசி பருப்பு குவிண்டால், 10,300 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 9,900 ரூபாய்க்கும், பாசி பயிறு குவிண்டால், 9,500 ரூபாயாக குறைந்துள்ளது.– நமது நிருபர் –
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|