பதிவு செய்த நாள்
16 பிப்2014
00:23

உலக நாடுகளின் போட்டியால், நடப்பு நிதியாண்டில், மக்காச்சோளம் ஏற்றுமதி, 15 சதவீதம் சரிவடையும் என, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா) தெரிவித்துள்ளது.உள்நாட்டில், நடப்பு நிதியாண்டில், மக்காச்சோளம் சாகுபடி பரப்பு, 1 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டில், 87 லட்சம் ஹெக்டேராக இருந்தது.இதே போன்று, இதன் உற்பத்தியும், 2.18 கோடி டன்னிலிருந்து, 2.30 கோடி டன்னாக உயரும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, குறைந்த விலையில் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்து வருகின்றன.இதையடுத்து, நம்நாடு, சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரையில், 30 லட்சம் டன் அளவிற்கே, மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்துள்ளது. எஞ்சியுள்ள நிதியாண்டின் இறுதிக்குள், மேலும், 10 லட்சம் டன் மக்காச்சோளம் ஏற்றுமதி செய்யவே வாய்ப்புள்ளது.இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (47.80 லட்சம் டன்) விட, 15 சதவீதம் குறைவாகும் என, ‘அபெடா’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ‘நம்நாட்டின் மக்காச்சோளம் ஏற்றுமதி விலைக்கும், அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் ஏற்றுமதி விலைக்கும், 5 முதல் 7 சதவீதம் வரை வேறுபாடு உள்ளது’ என்று தெரிவித்தார்.–பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து–
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|