பதிவு செய்த நாள்
16 பிப்2014
00:24

புதுடில்லி:சென்ற ஜனவரியில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 22 சதவீதம் சரிவடைந்து, 9.05 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 11.57 லட்சம் டன்னாக இருந்தது. கச்சா பாமாயில் இறக்குமதி, 50 சதவீதம் குறைந்து, 7.21 லட்சம் டன்னில் இருந்து, 3.37 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, தாவர எண்ணெய் (சமையல் மற்றும் அது சாராத எண்ணெய்), இறக்குமதி குறைந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, 1.53 லட்சம் டன்னில் இருந்து, 2.08 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இதற்கு, கச்சா பாமாயிலை விட, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விலை டன்னுக்கு, 15 20 டாலர் குறைவாக இருந்ததே காரணம் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த, 2013ம் ஆண்டு நவம்பர் முதல், நடப்பாண்டு ஜனவரி வரையிலான காலத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 5 சதவீதம் அதிகரித்து, 27.66 லட்சம் டன்னில் இருந்து, 29.17 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.மொத்த இறக்குமதியில், சமையல் எண்ணெயின் பங்களிப்பு, 28.51 லட்சம் டன்னாகவும், அது சாராத எண்ணெய்யின் பங்களிப்பு, 66,644 டன்னாகவும் உள்ளன. சென்ற இரு மாதங்களாக, சோயா எண்ணெய்யை விட, சூரியகாந்தி எண்ணெய் விலை குறைவாக இருந்ததால், அதன் இறக்குமதி அதிகரித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி அதிகரித்ததால், உள்நாட்டில், சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தித் திறனை, 55 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக குறைத்துக் கொண்டன.
இறக்குமதியான கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இடையிலான விலை வித்தியாசம் மிக குறைவாக இருந்ததால், பல சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன.இதையடுத்து, மத்திய அரசு, அண்மையில், கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஆகியவற்றின் இறக்குமதி வரியை, முறையே, 2.5 சதவீதம் மற்றும் 10 சதவீதமாக நிர்ணயித்தது.இந்தியா, அதன் சமையல் எண்ணெய் தேவையில், 50 சதவீதத்தை, இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்கிறது. மலேஷியா, இந்தோனேஷியாவில் இருந்து பாமாயிலும், பிரேசில், அர்ஜெண்டினாவில் இருந்து, சோயா எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|