பதிவு செய்த நாள்
16 பிப்2014
00:25

புதுடில்லி;நடப்பு 2013 14ம் வேளாண் பருவத்தில், நாட்டின் உணவு தானிய உற்பத்தி, 26.32 கோடி டன்னாக அதிகரிக்கும் என, இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நடப்பு 2013 14ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் உற்பத்தி வளர்ச்சி, 4.6 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 1.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது.நடப்பு வேளாண் பருவத்தில், நாட்டின் பல மாநிலங்களில், பருவமழை பொழிவு நன்கு இருந்ததால், ஒட்டு மொத்த சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. இதனால், நடப்பு பருவத்தில், உணவு தானிய உற்பத்தி, 26.32 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, கடந்த வேளாண் பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட, 5.71 கோடி டன் (இறுதி மதிப்பீடு) உணவு தானிய உற்பத்தியை விட, 2.36 சதவீதம் அதிகமாகும்.நடப்பு வேளாண் பருவத்தில் (ஜூலை ஜூன்), நாட்டின் நெல் உற்பத்தி, கடந்த பருவத்தை விட, 0.9 சதவீதம் அதிகரித்து, 10.52 கோடி டன்னிலிருந்து, 10.62 கோடி டன்னாக அதிகரிக்கும்.கோதுமை உற்பத்தி, 2.23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9.35 கோடி டன்னிலிருந்து, 9.56 கோடி டன்னாக அதிகரிக்கும். இதர தானியங்கள் உற்பத்தி, 1.07 சதவீதம் அதிகரித்து, 2.98 கோடி டன்னிலிருந்து, 3.01 கோடி டன்னாக வளர்ச்சி காணும்.
மதிப்பீட்டு பருவத்தில், பருப்பு வகைகள் உற்பத்தி, 7.79 சதவீதம் அதிகரித்து, 1.83 கோடி டன்னிலிருந்து, 1.98 கோடி டன்னாக வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக, ஒட்டு மொத்த தானிய உற்பத்தி, 2.36 சதவீதம் வளர்ச்சி கண்டு, 25.71 கோடி டன்னிலிருந்து, 26.32 கோடி டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எண்ணெய் வித்துக்கள்:எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 6.59 சதவீதம் அதிகரித்து, 3.09 கோடி டன்னிலிருந்து, 3.30 கோடி டன்னாக அதிகரிக்கும். கரும்பு உற்பத்தி, 4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.41 கோடி டன்னிலிருந்து, 3.55 கோடி டன்னாக அதிகரிக்கும்.பருத்தி உற்பத்தி, 4.03 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.42 கோடி பொதிகளிலிருந்து (ஒரு பொதி 170 கிலோ), 356 கோடி பொதிகளாக அதிகரிக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகத்தின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|