பதிவு செய்த நாள்
18 பிப்2014
12:37
புதுடில்லி : 2014-15-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் கார்களுக்கான கலால்வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கார்களின் விலை குறைய உள்ளது. நேற்று அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில், சிறிய ரக கார்கள், மோட்டார் சைக்கிள், வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் மீதான கலால் வரி, 12 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. எஸ்.யு.வி., எனப்படும், 'ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி' வாகனங்கள் கலால் வரி, 30 சதவீதத்திலிருந்து, 24 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. பெரிய மற்றும் நடுத்தர பிரிவு கார்கள் மீதான வரி, 27 - 24 சதவீதத்திலிருந்து, 24 - 20 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கார்களுக்கான வரி குறைக்கப்பட்டு உள்ளது குறித்து, 'மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், பவன் கோயங்கா கூறுகையில், ''இந்த வரி குறைப்பால், வாகனங்களின் விலை, 3 சதவீதத்திலிருந்து, 4 சதவீதம் வரை குறையும். உடனடியாக, இந்த விலை குறைப்பின் பயனை, வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம்,'' என்றார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|