பதிவு செய்த நாள்
24 பிப்2014
17:04

மும்பை : வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள், எல்அண்ட்டி, டாடா பவர் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை ஏற்றத்தால் ஏற்றத்தில் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின்போது சென்செக்ஸ் குறியீட்டு எண் 62.09 புள்ளிகள் சரிந்தும், தேசிய பங்குசந்தையான நிப்டி 13.25 புள்ளிகள் சரிந்து இருந்தன. பின்னர் உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், வங்கி மற்றும் முதலீட்டு தொடர்பான பங்குகளின் விலை உயரத் தொடங்கின. இதனால் வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 110.69 புள்ளிகள் உயர்ந்து 20,811.44-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 30.65 புள்ளிகள் உயர்ந்து 6,186.10-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 22 நிறுவன பங்குகள் விலை ஏற்றத்தில் முடிந்தன. குறிப்பாக டாடா பவர், எல்அண்ட்டி., ஆக்சிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|