பதிவு செய்த நாள்
26 பிப்2014
14:49

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில், அதிகாரபூர்வ அறிவிப்பில், அதன் புதிய ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வந்துள்ளது. இது Micromax Bolt A068 என அழைக்கப்படுகிறது. இந்த போனின் சிறப்பு இதன் பன்மொழித் திறன் ஆகும். இந்தியாவின் 20 மாநில மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட் டைப் செய்து அனுப்பலாம். ஆங்கில தட்டச்சு முறையில் டைப் செய்து, மாநில மொழிகளில் சொற்களைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எழுத்து வகைகளையும் பயனாளரே தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
இதில் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் திரை டச் ஸ்கிரீன் கொண்டு 5 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 0.3 வெப் கேமராவும், 5 எம்.பி. வழக்கமான கேமராவும் இயங்குகின்றன. இதன் மூலம் போட்டோவையும் வீடியோ காட்சிகளையும் பதிவு செய்திடலாம்.
போனில், MT 6572M டூயல் கோர் ப்ராசசர், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி தரப்பட்டு, அதனை அதிகப்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.எஸ்., 3ஜி, புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. இணைவு கிடைக்கிறது. இதில் தரப்பட்டும் லித்தியம் அயன் பேட்டரி 2,000 mAh திறனுடன் உள்ளது. ஸ்நாப் டீல் இணைய வர்த்தக தளத்தில் ரூ.6,900 என்று விலையிடப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|