பதிவு செய்த நாள்
26 பிப்2014
14:59

எல்..ஜி. மொபைல் போன் நிறுவனம், தன் எல் சிரீஸ் வரிசையில், புதியதாக மூன்று போன்கள் குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. L40, L70 மற்றும் L90 என இவை அழைக்கப்படுகின்றன. இவை ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இவை மூன்றிலும் முறையே 3.5 , 4.5 மற்றும் 4.7 அங்குல அகலத்தில் திரைகள் வெவ்வேறு டிஸ்பிளே தன்மையுடன் தரப்படுகின்றன. அனைத்திலும் 3ஜி தொழில் நுட்பம் இயங்கும். கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இவை கிடைக்கும். எல் 40 மாடலில், 1.2 டூயல் கோர் கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், 3 எம்பி பின்புறக் கேமரா, 512 எம்பி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, இதனை 32 ஜிபிக்கு அதிகப்படுத்தும் வசதி, 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் கிடைக்கும். சந்தையில் கிடைப்பதைப் பொறுத்து, இதில் 1,700 அல்லது 1,540 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்படும். இதன் பரிமாணம் 109.4 x 59.0 x 11.9 மிமீ ஆக இருக்கும்.
எல் 70 மாடல் மொபைல் போனில், 4.5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், 8 அல்லது 5 எம்பி கேமரா, முன்புறமாக 0.3 எம்பி கேமரா, 1 ஜிபி ராம் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதியுடன் 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி தரப்படும். 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் நெட்வொர்க் வசதியைத் தரும். இதில் 2,100 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படும். இதன் பரிமாணம் 127.2 x 66.8 x 9.5 மிமீ ஆக இருக்கும்.
எல் 90 மாடல் போனில், 4.7 அங்குல திரை கெபாசிடிவ் டச் வசதியுடன் கூடியதாகத் தரப்படும்.
இதில் அதிக வேகத்துடன் இயங்கும் வகையில், 1.2 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர் இணைக்கப்படும். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 1.3 எம்பி திறன் கொண்ட முன்புறக் கேமரா இருக்கும். இதன் ராம் மெமரி திறன் 1 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜிபி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். இயங்கும். இதில் 2,540 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்படும். இதன் பரிமாணம் 131.6 x 66.0 x 9.7 மிமீ ஆக இருக்கும்.
சந்தைக்கு வரும்போது இவற்றின் விலை தெரியப்படுத்தப்படும். இதே வசதிகளுடன் கூடிய மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களுடன் போட்டியிடும் வகையிலேயே விலை தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட் போன்கள் எல்.ஜி. நிறுவனத்தின் தயாரிப்பு தான் வாங்குவேன் என விருப்பம் உள்ளவர்கள், இவை சந்தைக்கு வரும்வரை காத்திருக்கலாம்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|