தங்கம் விலை ரூ.96 குறைந்ததுதங்கம் விலை ரூ.96 குறைந்தது ... ஊழியர்களின் சம்பளத்தை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்துகிறது இன்போசிஸ் ஊழியர்களின் சம்பளத்தை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்துகிறது இன்போசிஸ் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹலோ டாக்டர் ஆட்டோமொபைல்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2014
12:52

நான் ஐந்து லட்ச ரூபாய் விலையில், ஹேட்ச் பேக் வாங்க விரும்புகிறேன். எந்த கார் வாங்கலாம் என்று கூற முடியுமா?

பதில்: ஐந்து லட்சம் ரூபாய் விலையில் வாங்கக் கூடிய ஹேட்ச்பேக் என, பார்க்கையில் மாருதி ஸ்விப்ட், ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ப்ரையோ போர்ட், பிகோ மற்றும் போக்ஸ்வேகன் போலானவை குறிப்பிடலாம். இவற்றுள் ஓட்டுவதற்கு சுலபம், எரிபொருள் சிக்கினம் குறைவான பராமரிப்பு செலவு போன்றவற்றில், மாருதி ஸ்விப்ட் சிறந்தது எனலாம்.

இது, டீசல் மற்றும் பெட்ரோலில் கிடைக்கிறது. ப்ரயோ பார்ப்பதற்கு ஸ்போட்டியான தோற்றம் கொண்ட கார் மற்றும் ஹோண்டா இன்ஜின் செயல் திறனில் மற்றவைகளை விட, சிறப்பானது எனலாம். ப்ரைபோ ஆட்டோ டிரான்ஸ் மிஷனிலும் கிடைக்கிறது. ஆனால், விலை 6.5 லட்சத்திற்கு அதிகமாகி விடும். போலோ சொகுசு அம்சங்களில் சிறந்தது என, கூறலாம். ஹூண்டாய் ஐ20 அதிக சக்தி தரக் கூடியது எனலாம். இதன், 1197 சிசி பெட்ரோல் இன்ஜின் 82.9 பி.எச்.பி., சக்தியையும், 114 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. போர்ட் பிகோ பெட்ரோல் மற்றும் டீசல் தேர்வுகளில் கிடைக்கிறது.

என் காரில் அதிர்வு அதிகமாக தெரிகிறது. இது எதனால் இருக்கலாம்?

பதில்: வண்டியில் அதிர்வு அதிகமாய் தெரிந்தால், வண்டி ஓட்டும் போது, கூர்ந்து கவனிக்க வேண்டும். வேகத்திற்கு ஏற்ப அதிர்வு மாறுகிறதா, அதிர்வுடன் சத்தமும் வருகிறதா, எந்தப் பகுதியிலிருந்து சத்தம் வருகிறது, அதிர்வை ஸ்டியரிங் வீல், பிரேக் மற்றும் இருக்கையில் எங்கிருந்து உணர முடிகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

பொதுவாக, காரின் அதிர்விற்கு டயர் மற்றும் வீல், இன்ஜின், சஸ்பென்ஷன், ஸ்டியரிங்கின் பகுதிகள், பிரேக் மற்றும் டிரைவ் அல்லது ப்ரொப்பெல்லர் ஹாப்ட்களின் பிரச்னைகள் காரணமாயிருக்கும். வேகத்திற்கு ஏற்ப அதிர்வு இருந்தால், சக்கரம் மற்றும் டயர் காரணமாக இருக்கலாம். பிரேக் போடும் போது மட்டும் அதிர்வு இருந்தால், பிரேக் டிஸ்க் தேய்மானம் அல்லது சாய்மானத்தினால் இருக்கலாம். அதிக வேகத்தில் அதிர்வை ஸ்டியரிங்கில் உணர முடிந்தால், ஸ்டியரிங் வீல் பகுதிகளில் பிரச்னை இருக்கலாம். வண்டி நகரும் போதோ, வேகத்தை குறைக்கும் போதோ, அதிர்வு இருந்தாலோ, காரின் பின்பகுதி, மேலும் கீழுமாய் வேகத்திற்கு ஏற்ப அதிர்ந்தாலோ சஸ்பென்ஷன் பாகங்களில் பிரச்னை இருக்கலாம். இவற்றை தவிர, இன்ஜினில் பிரச்னை இருந்தாலும் அதிர்வு ஏற்படும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)