பதிவு செய்த நாள்
02 மார்2014
12:53

புதுடில்லி : அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டுமே 70 கோடீஸ்வர்கள் உள்ளனர். இவர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
சீனாவைச் சேர்ந்த ஹூருன் என்ற நிறுவனம் 2014ம் ஆண்டில் உலக அளவில் மிகப் பெரிய பணக்காரர்கள் குறித்த ஆய்வு நடத்தி, அவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துடன் இந்திய அளவில் முதலிடத்திலும், உலக பணக்காரர்கள் ப்டடியலில் 41வது இடத்திலும் முகேஷ் அம்பானி உள்ளார். உலக அளவில் அதிக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 68 பில்லியன் டாலர். இந்த பட்டியலில் இந்தியாவின் லட்சுமி மிட்டல் 17 பில்லியன் டாலர்களுடன் 49வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் உள்ள 70 கோடீஸ்வரர்களில் 33 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால் உலக அளவில் இந்திய பணக்காரர்களின் வரிசை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பானை விட இந்தியாவிலேயே அதிக பணக்காரர்கள் இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 390 பில்லியன் கோடி. அமெரிக்காவில் 481 கோடீஸ்வரர்களும், சீனாவில் 358 கோடீஸ்வரர்களும் உள்ளனர். ஐரோப்பா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வு பட்டியல் அறிக்கையின்படி உலகின் 68 நாடுகளில் 1867 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|