பதிவு செய்த நாள்
07 மார்2014
10:59

மும்பை : இந்திய பங்குசந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று(மார்ச் 7ம் தேதி) மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட்டன. இன்று காலை முதலே இந்திய பங்குசந்தைகள் உயர்ந்து காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 196 புள்ளிகள் உயர்ந்து 21,710.43-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 53.55 புள்ளிகள் உயர்ந்து 6,454.70-ஆகவும் உயர்ந்தன. மேலும் நண்பகல் 12மணிக்கு மேல் இந்திய பங்குசந்தைகள் இன்னும் அதிகமாக உயர்ந்தது. நண்பகல் 12.45 மணியளவில் சென்செக்ஸ் 304.05 புள்ளிகள் உயர்ந்து 21,817.92-ஆகவும், நிப்டி 92.35 புள்ளிகள் உயர்ந்து 6,493.50-ஆகவும் இருந்தன.
மூன்றாவது காலண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை வெகுவாக குறைந்ததன் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. கடந்த மூன்று தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயர்ந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|