தங்கம் விலை ரூ.40 அதிகரிப்புதங்கம் விலை ரூ.40 அதிகரிப்பு ... பொருளாதார வளர்ச்சிநன்கு உள்ளது: சிதம்பரம் பொருளாதார வளர்ச்சிநன்கு உள்ளது: சிதம்பரம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தியா முழுவதும் 60 ஷோரூம் திறக்க இசுசூ மோட்டார்ஸ் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2014
13:45

இசுசூ மோட்டார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஜப்பானைச் சேர்ந்த ஆட்டோமொபைல் தயாரிப்பு மற்றும் டீசல் என்ஜின் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் முதல் ஷோரூம் மதுரையில் திறக்கப்பட்டுள்ளது. கப்பலூரில் அமைந்துள்ள இந்த ஷோரூம் 2500 சதுர அடியில் பரந்து விரிந்துள்ளது. இந்த புதிய ஷோரூம் அண்டை மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, விருதுநகரைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

மதுரை ஷோரூம் உள்பட தென்னிந்தியாவில் இதுவரை 7 ஷோரூம்களை இசுசூ நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மதுரை, சென்னை, கோவையில் 3 ஷோரூம்கள் அமைந்துள்ளன. வரும் 2015-16-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 60 ஷோரூம்களை திறக்க இசுசூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இசுசூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டோகாஷி கிகுஷி கூறியபோது, மதுரையில் முதல் ஷோரூமை திறப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் எங்களது காலடித் தடங்களை விரிவுபடுத்திக் கொண்டே வருகிறோம். புதிய டீலர்ஷிப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச தரத்தில் சேவைகள் வழங்கப்படும். தமிழ்நாட்டின் வாழ்க்கைதரம், அந்தஸ்தை உயர்த்தும் வகையிலும் இசுசூ நிறுவனம் செயல்படும். அதன் மூலம் நிறுவனத்தின் சந்தை வாய்ப்பும் படிப்படியாக அதிகரிக்கப்படும், என்றார்.

அவர் மேலும் கூறியபோது, தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று மதுரை. இந்த மாநகரத்தை எங்களது முக்கிய சந்தைகளில் ஒன்றாகக் கருதுகிறோம். அண்மைக்காலமாக வேளாண், ஆட்டோமொபைல், ரப்பர் துறைகளில் மதுரை பகுதி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, என்றார்.

இசுசூ நிறுவனம் இந்தியாவில் தற்போது ஸ்போர்ட்ஸ் ரக காரான எம்.யு-7, டி-மேக்ஸ் டிரக் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. எம்.யு.-7 காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த காரின் விலை ரூ.21.21 லட்சமாகும் (எக்ஸ்-ஷோரூம் மதுரை). எம்.யு.-7 காரில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது எரிபொருள் சிக்கனம், மிகச் சிறந்த என்ஜின் திறனை வெளிப்படுத்தும். 3 மீட்டர் வீல்-பேஸ் கொண்ட எம்.யு-7 கார், இந்தியாவில் விற்பனையாகும் எஸ்.யு.வி. ரக கார்களில் மிகவும் நீளமானதாகும். சொகுசான பயணம், விசாலமான இடவசதி ஆகியவை இதன் சிறம்பம்சமாகும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)