பதிவு செய்த நாள்
07 மார்2014
23:49

புதுடில்லி:தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின், புதிய வங்கி உரிமம் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்,’’ என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தலைமையில், நேற்று, ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழு கூட்டம், டில்லியில் நடைபெற்றது.
27 நிறுவனங்கள்:இக்கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் ரகுராம் ராஜன் கூறியதாவது:மத்திய அரசின் ஒப்புதலை யடுத்து, ரிசர்வ் வங்கி, புதிய வங்கி துவங்குவதற்கான விண்ணப்பங்களை பெற்றது. இது தொடர்பாக, இந்திய அஞ்சல் துறை, ஐ.எப்.சி.ஐ., அனில் அம்பானி குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம் உள்ளிட்ட, 27 நிறுவனங்கள், புதிய வங்கி துவங்குவதற்கு உரிமம் அளிக்க விண்ணப்பித்தன. இந்நிலையில், டாட்டா சன்ஸ் மற்றும் வேல்யூ
இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள், விண்ணப்பங்களை திரும்பப்பெற்றன.புதிய வங்கி துவங்குவதற்கான உரிமம் வேண்டி வந்த விண்ணப்பங்களை, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், பிமல் ஜலான் தலைமையிலான குழு ஆய்வு செய்து, ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில்...புதிய வங்கி துவங்குவதற்கான அனுமதி குறித்த அறிவிப்பு, இம்மாதம் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடைமுறை விதி அமலுக்கு வந்துள்ளது.எனவே, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே, இதுகுறித்த அறிவிப்பை வெளியிடமுடியும். தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கும்பட்சத்தில், அடுத்த சில வாரங்களில், இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.இவ்வாறு, ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|