பதிவு செய்த நாள்
07 மார்2014
23:56

இந்திய பங்குச் சந்தை களில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இந்திய பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்கான சூழல் மற்றும் லோக்சபா தேர்தலுக்கு பின், மத்தியில் புதிய ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவையே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது.
110 கோடி டாலர்:பிப்ரவரி 12ம் தேதி முதல், தொடர்ந்து 15 வர்த்தக தினங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், 110 கோடி டாலர் (7,000 கோடி ரூபாய்) அளவிற்கு பங்குகளில் முதலீடு செய்துள்ளன.நடப்பாண்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரி துவக்கத்தில்,இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து, அன்னிய நிதி நிறுவனங்கள், அதிக அளவில் முதலீடுகளை திரும்பப் பெற்றன.இந்நிலையில், பிப்ரவரி மத்தியில் இருந்து, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இத்துடன், கடன் பத்திரங்களிலும் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன.நடப்பாண்டில் இதுவரை, 500 கோடி டாலர் அளவிற்கு, கடன் பத்திரங்களில் அன்னிய முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதே காலத்தில், பங்குகளில், 82 கோடி டாலர் (4,850 கோடி ரூபாய்) அளவிற்கு, அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
ஆய்வாளர்கள் கருத்து:கடந்த, 2013ம் ஆண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிதிச் சந்தைகளில், 2,000 கோடி டாலர் (1.12 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்திருந்தன.வரும் மே மாதம் வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளை பொறுத்தே, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு கொள்கை அமையும் என, ஆய்வாளர்கள்
தெரிவித்தனர்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|