பதிவு செய்த நாள்
10 மார்2014
10:26

மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(மார்ச் 10ம் தேதி) சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ், முதன்முதலாக 22 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. கடந்தவாரம் முழுக்க முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வந்தன இந்திய பங்குசந்தைகள். இதன்காரணமாக முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு அதிகளவு பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின. சென்செக்ஸ் 47.30 புள்ளிகளும், நிப்டி 39.30 புள்ளிகளும் சரிந்து இருந்தன. இருப்பினும் கொஞ்சம் நேரத்தில் உயர்ந்த பங்குசந்தைகள் புதிய உச்சமாக 22 ஆயிரத்தை கடந்து, 22,005.54 எனும் நிலையை தொட்டது. ஆனபோதும் பின்னர் பங்குசந்தைகள் சரிந்தன. பின்னர் ஏற்றம் கண்டன. 10.20 மணியளவில் சென்செக்ஸ் 10.39 புள்ளிகள் உயர்ந்து 21,930.18-ஆகவும், நிப்டி 3.80 புள்ளிகள் உயர்ந்து 6,530.45-ஆகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|