பதிவு செய்த நாள்
10 மார்2014
17:43

மும்பை : கடைசியாக நடந்த மூன்று பங்குவர்த்தகத்தில் ஒவ்வொரு நாளும் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், இன்று(மார்ச் 10ம் தேதி) வாரத்தின் முதல்நாளில், மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முதன்முறையாக சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்து இருக்கிறது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின. பின்னர் ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வந்தன. இறுதியில் வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 15.04 புள்ளிகள் உயர்ந்து 21,934.83-ஆக முடிந்தது. இன்றைய வர்த்தகநேரத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 22,023.98 புள்ளிகள் வரை சென்று சாதனை படைத்தது.
அதேப்போல் தேசிய பங்குசந்தையான நிப்டி 10.60 புள்ளிகள் உயர்ந்து 6,537.25-ஆக முடிந்தது. வர்த்தகநேரத்தின் போது நிப்டி அதிகபட்சமாக 6,562.20 புள்ளிகள் வரை சென்றது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 15 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|