பதிவு செய்த நாள்
11 மார்2014
00:25
புதுடில்லி:பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், கடந்த ஜனவரியில், 19 சதவீதம் அதிகரித்து, 7,381 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதில், பொதுத் துறையைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களின் மொத்த பிரிமிய வருவாய், 24.59 சதவீதம் உயர்ந்து, 4,106 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பொதுத் துறையில், நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. தனியார் துறையில், 23 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.சென்ற ஜனவரியில், பொது காப்பீட்டு துறையைச் சேர்ந்த, 27 நிறுவனங்கள் திரட்டிய மொத்த பிரிமியத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களின் பங்களிப்பு, 56 சதவீதமாக உள்ளது.இதே மாதத்தில், தனியார் துறையைச் சேர்ந்த, அப்போலோ மூனிச் நிறுவனத்தின் பிரிமியம் வருவாய், 53 சதவீதம் அதிகரித்து, 166.77 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|