பதிவு செய்த நாள்
14 மார்2014
12:44

புதுடில்லி : ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 5.9 சதவீதம் சரிந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. தேயிலை உற்பத்தியில், உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேயிலை அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இதேப்போல் வடமாநிலங்களில் அசாமில் அதிகளவு தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான தேயிலை உற்பத்தியை மத்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ளது.
இதில் இம்மாதத்தில் தேயிலை உற்பத்தி 5.9 சதவீதம் சரிந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் உற்பத்தி பெரிதும் குறைந்ததால், ஒட்டுமொத்த அளவில் நாட்டின் தேயிலை உற்பத்தி சரிவடைந்துள்ளது. தமிழகத்தில், ஜனவரி மாதத்தில் 1.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தியாகியுள்ளது. இது, 2013 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|