பதிவு செய்த நாள்
14 மார்2014
14:11

புதுடில்லி : காய்கறிகளின் விலை குறைந்ததால் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைந்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் பணவீக்கத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் வெளியாகியுள்ளது. இதில் நாட்டின் மொத்த பணவீக்கம் 4.68 சதவீதமாக குறைந்துள்ளது. முன்னதாக ஜனவரியில் இது 5.05 சதவீதமாக இருந்தது. கடந்த மே 2013க்கு பின்னர் பணவீக்கம் தற்போது தான் 5 சதவீதத்திற்கு கீழ் சென்றுள்ளது.
கடந்த இருதினங்களுக்கு முன்னர் வெளியான சில்லரை வர்த்தக பணவீக்கத்தில், உணவுப்பொருட்களின் பணவீக்கம் வெகுவாக குறைந்தது. குறிப்பாக பழங்கள், பால் தவிர்த்து மற்ற உணவுப்பொருட்களான வெங்காயம், உருளைகிழங்கு போன்ற பொருட்களின் விலை வெகுவாக குறைந்ததால் உணவுப்பொருட்களின் பணவீக்கம் 8.12 சதவீதமாக குறைந்தது. இதன்வெளிப்பாடாகத்தான் தற்போது பணவீக்கமும் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே பணவீக்கம் குறைந்ததால் வருகிற ரிசர்வ் வங்கியின் பணவெளியீட்டு கொள்கையில் வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|