பதிவு செய்த நாள்
14 மார்2014
16:57

மும்பை : பணவீக்கம் குறைந்ததால் வாரத்தின் கடைசிநாளில் சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன. உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழலால் அமெரிக்கா உள்ளிட்ட உலகளவில் பங்குசந்தைகள் சரிந்தது, மேலும் சீனாவின் வளர்ச்சி குறைந்ததால், ஆசியாவின் இதர பங்குசந்தைகளும் சரிந்து இருந்தன. இதனால், இந்திய பங்குசந்தைகளும் இன்று சரிவுடனேயே இருந்தன. இந்நிலையில் மதியம் பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் வெளியானது. அதில் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 4.68 சதவீதமாக குறைந்தது. இதனால் பங்குசந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக சரிவில் இருந்து மீண்டு இறுதியில் ஏற்றத்தில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 35.19 புள்ளிகள் உயர்ந்து 21,809.80-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 11.10 புள்ளிகள் உயர்ந்து 6,504.20-ஆகவும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 15 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 14 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. டாடா பவர் பங்குவிலை மாற்றமின்றி முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டி லேப், சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோ கார்ப், இன்போசிஸ், லார்சன் அண்ட் டர்போ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பெல், சிப்லா நிறுவன பங்குகள் லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|