தங்கம் விலை ரூ.64 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.64 உயர்ந்தது ... 2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை மாற்ற 2015 வரை காலநீட்டிப்பு - ரிசர்வ் வங்கி!! 2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை மாற்ற 2015 வரை காலநீட்டிப்பு - ரிசர்வ் வங்கி!! ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் போன் நோக்கியா எக்ஸ்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2014
13:50

நோக்கியா நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை நோக்கியா எக்ஸ் என்ற பெயரில், சென்ற வாரம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து, பிப்ரவரியில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கில் அறிவிப்பு தரப்பட்டது. விண்டோஸ் 8 போல டைல்ஸ் அடிப்படையிலான ஹோம் ஸ்கிரீன் இதில் தரப்பட்டாலும், இது ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 4 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் ப்ராசசர் (S4 play MS M8225) இயங்குகிறது.

இதில் இரண்டு சிம் இயங்குவது இதன் இன்னொரு சிறப்பம்சமாகும். 3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. நோக்கியா ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தொகுப்புகளை டவுண்லோட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. Facebook, LINE Messenger, Picsart, Plants vs. Zombies 2, Real Football 2014, Skype, Spotify, Swiftkey, Twitter, Viber, Vine, WeChat, TrueCaller போன்ற பல அப்ளிகேஷன்கள் மற்றும் விளையாட்டுக்கான புரோகிராம்கள் இங்கு கிடைக்கின்றன.

இதன் பரிமாணம் 115.5 x 63 x 10.44 மிமீ. எடை 128.6 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 512 எம்.பி. ராம் நினைவகம், 4 ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி. கார்ட் விரிவாக்கம், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்., ஆகிய தொழில் நுட்பங்கள் எனப் பல வŒதிகள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1500 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு, வெள்ளை, சிகப்பு, இளஞ்சிகப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.8,599.

இதன் அறிமுக விழாவிலேயே, நோக்கியா நிறுவனம், தன் நோக்கியா எக்ஸ் ப்ளஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்.எல். ஆகிய இரு போன்களையும் வரும் இரண்டு மாத காலத்தில் இந்தியாவிற்கு விற்பனைக்கு அனுப்ப இருப்பதாக அறிவித்தது. இவை இரண்டும் இரண்டு சிம் இயக்கத்தினைக் கொண்டுள்ள ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களாகும்.

நோக்கியா எக்ஸ் ப்ளஸ், ஏறத்தாழ நோக்கியா எக்ஸ் மாடல் போனைப் போன்றதாகும். ஆனால், இதன் ராம் மெமரி 768 எம்.பி. உடையதாக உள்ளது. எக்ஸ் ப்ளஸ் திரை 4 அங்குல அகலத்திலும், எக்ஸ் எல் 5 அங்குல அகலத்திலும் திரைகளைக் கொண்டுள்ளது. இரண்டிலும் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்களைக் (MSM8225) கொண்டுள்ளன. நோக்கியா எக்ஸ் ப்ளஸ் மாடல் போனில் 3 எம்.பி. திறன் கேமராவும், எக்ஸ். எல். போனில் 5 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் இணைக்கப்பட்டுள்ளன. எக்ஸ்.எல்.மாடலில் முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளது. இவை இரண்டும் 3ஜி நெட்வொர்க் இணைப்பில் செயல்படுபவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)