பதிவு செய்த நாள்
17 மார்2014
15:25

புதுடில்லி : 2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, 2015, ஜனவரி 1 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த, 2005ம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட, அனைத்து கரன்சிகளும், திரும்ப பெறப்படும்," என, ரிசர்வ் வங்கி சமீபத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது இதனை நீட்டிப்பு செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது, 2005ம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுக்களை எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் எனவும், நோட்டுக்களை மாற்றுவதற்கான தேதி 2015 ஜனவரி முதல் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2005-ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் மாற்றிக் கொள்ள எந்த கட்டுப்பாடும் கிடையாது எனவும், யார் வேண்டுமானாலும் எவ்வளவு ரூபாயை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம், மேலும் வங்கிகள் இனி 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு விடக்கூடாது என்றும், அப்படி ரூபாய்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகள், அதனை ரிசர்வ் வங்கியிடம் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|