தங்கம் விலையில் சரிவு - சவரனுக்கு ரூ.200 குறைந்ததுதங்கம் விலையில் சரிவு - சவரனுக்கு ரூ.200 குறைந்தது ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.60.89 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.60.89 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
குட்டி காருடன் மெகா ரேஸ் இந்தூர் பாகா ரேஸ் 2014
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2014
14:10

ஏழாவது பாகா ரேஸ், கடந்த, பிப்., 24ம் தேதி 2014 அன்று, இந்தூரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பந்தயத்தில் கலந்துகொள்ள, இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளிலிருந்து, 327 குழுக்கள் விண்ணப்பித்திருந்தனர். அதிலிருந்து, 125 குழுக்கள் இறுதிகட்ட ரேசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் கிட்டத்தட்ட, 6,500 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
எஸ்.ஜி.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ்,முதல் பரிOஉான, 3லட்சம் ரூபாய் வென்றது. இரண்டாவது பரிசான 1.5 லட்சம் ரூபாய், பூனாவில் உள்ள காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கும், மூன்றாவது பரிசுகான, ஒரு லட்சம் ரூபாய், வேலூரில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியும் வென்றன. ஆட்டோமொபைல் துறையை சார்ந்த பொறியியல் மாணவர்கள், தாங்கள் கற்ற கல்வியை அனுபவப் பூர்வமாக செயல்படுத்திப்பார்க்க, இந்த பாகா ரேஸ், சிறந்த களமாகவிளங்கி வருகிறது.
ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் சொசைட்டியும், மஹிந்திரா, நிறுவனத்துடன்இணைந்து, இந்த போட்டியை நடத்தின. மாணவர்கள் தயாரித்த காரின் செயல்திறனை, பரிசோதிக்கும் படியாக பந்தயத்திலேயே ஓட்டி, பலர் அறிய சோதித்து பார்த்து விடுகின்றனர். இது மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த உதவுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின், மனிதவள மேம்பாட்டுவல்லுனர்கள், பாகா ரேசை பார்வையிட வருகின்றனர். அவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ö ப ா றி ய ா ள ர் க ø ள யு ம் , இம்மாணவர்களிடையே இருந்துதேர்ந்தெடுக்கின்றனர். இதனால், இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தங்கள் தொழிலில் முன்னேறவும், வாய்ப்பாக அமைகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், மத்தியப் பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட, 15 குழுக்களில், 8 குழுக்கள் இந்தூரை சேர்ந்த குழுவினர். இதில், 7 குழுக்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த பந்தயத்தில், மொத்தம், 106 குழுக்கள், ஓட்டத்தை துவங்கின. இருப்பினும், 40 குழுக்கள் மட்டுமே இறுதி சுற்றுவரை தாக்குப்பிடித்தன.
தமிழகத்தின் சார்பாக, கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரி, மூன்று விருதுகளும்; வேலூர் இன்ஸ்டி டியூட் ஆப் டெக்னாலஜி, மூன்று விருதுகளும், திருச்சி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஒருவிருதும் பெற்றன. அடுத்த ஆண்டு, இந்த பாகாரேஸ், சர்வதேச ரேசாக நடைபெற உள்ளது. இதன் மூலம் நம் நாட்டு மாணவர்கள், பன்னாட்டு மாணவர்களோடு தங்கள் திறமையை சோதித்து பார்க்கும் வாய்ப்பு, பிரகாசமாக உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)