பதிவு செய்த நாள்
25 மார்2014
17:27

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்ற-இறக்கத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் சிறிய அளவில் சரிந்தும், நிப்டி சிறிய ஏற்றத்துடனும் முடிந்தன. இந்திய பங்குசந்தைகள் நேற்று வரலாறு காணாத அளவுக்கு உயர்வை தொட்டன. இருப்பினும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததாலும், முக்கிய நிறுவன பங்குகள் விலை சரிந்ததாலும் இந்திய பங்குசந்தைகள் இன்று மந்தமாகவே முடிந்தன. இருப்பினும் நிப்டி மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட்டது.
இன்றைய வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 0.27 புள்ளிகள் சரிந்து மாற்றமின்றி 22,055.21-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 6.25 புள்ளிகள் உயர்ந்து 6,589.75-ஆகவும் முடிந்தது. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது நிப்டி அதிகபட்சமாக 6,595.55 புள்ளிகள் வரை சென்றது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், 14 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 1 நிறுவன பங்குவிலை மாற்றமின்றியும் முடிந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|