பதிவு செய்த நாள்
27 மார்2014
10:18

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கின்றன. சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளிலும், நிப்டி 6600 புள்ளிகளிலும் நீடிக்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (மார்ச் 27ம் தேதி, காலை 9.15 மணியளவில்) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 62.65 புள்ளிகள் உயர்ந்து 22,157.95-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 6.60 புள்ளிகள் உயர்ந்து 6,608.00 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
ஆசிய பங்குசந்தைகளில் சரிவு காணப்பட்ட போதிலும், அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருவதாலும், முக்கிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வருவதாலும் இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 1.18 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.72 சதவீதமும் சரிந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|