பதிவு செய்த நாள்
27 மார்2014
15:32

விசாலமான "கூபே' வடிவமைப்புடன், பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ், "கிரான் டூரிஸ்மோ குன் எக்ஸ்குளூசிவ்' சார்பில் நடத்தப்பட்ட, சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்கோ கார், விளையாட்டு ரக காராகவும் அழகிய வடிவமைப்புடன், உயர் செயல்திறன், புரட்சிகரமான தொழில்நுட்பம், கண்கவர் அழகும், சொகுசும் கொண்ட உள்வடிவமைப்பு கொண்டதாக உள்ளது.
இக்காரின் முன்புறம் அழகிய நேர்த்தியுடன் கூபே மாதிரியாக மேற்கூரையும், சுற்று சட்டம் இல்லாத கண்ணாடி கதவுகளும், பின்புற ஸ்பாய்லரும் (கார் பயணிக்கும் போது மணிக்கு, 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலோ, 70 கிலோ மீட்டர் வேகத்திற்கு கீழோ போகும்போது, தானாகவே வேகத்தை கட்டுப்படுத்தக்கூடியது) கொண்டு மிகக் கவர்ச்சியான தோற்றத்துடன் திகழ்கிறது. ரியர் ஸ்பாய்லரின் புதுமையான தொழில்நுட்பம் போல, "ஏர் பிரீதர்ஸ்' மூலம் காற்றின் எதிர் திசை வேகத்தையும், காரின் ஏரோடைனமிக் டிராக்கையும் குறைக்க முடியும்.
விசாலமான இடவசதி கொண்ட உட்புறத்தில், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப, இருக்கைகள் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன. 520 லிட்டர் இடம், பொருட்கள் வைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளதுடன், "ஸ்பிலிட் ரியர் பேக்ரெஸ்ட்டை' பயன்படுத்தி, 1,600 லிட்டர் இடவசதியை, பொருட்கள் வைப்பதற்காக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
பி.எம்.டபிள்யூ, 3 சீரிஸ் டூரிஸ்மோவில் உள்ளது, 2.0 லிட்டர் பி.எம்.டபிள்யூ ட்வின் பவர் டர்போ சிலிண்டர் டீசல் இன்ஜினான, இது டர்போ சார்ஜர் டெக்னாலஜி கொண்டுள்ளது மற்றும், 184 ஹெச்.பி., சக்தியும், 380 என்எம் டார்க்கையும் வழங்கக் கூடியது. இதில், மணிக்கு 0-100 கி.மீ., என்ற வேகத்தை, 7.9 நொடிகளில் எட்ட முடியும் என்பதும், 226 கி.மீ., மணிக்கு என்ற அதிகபட்ச வேகத்தை அடைய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 8 வேக தானியங்கி கியர் கொண்டு இயங்குகிறது இக்கார்.
மேலும், இதில், 6 காற்றுப் பைகள், டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (டி.எஸ்.சி.,), டைனமிக் டிராக் ஷன் கண்ட்ரோல் (டி.டி.சி.,), கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ஹெகல் இம்மொபலைசர் கிராஷ் சென்சார், சைட் இன் பாக்ட் புரொடெக் ஷன் போன்ற, பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
இதிலுள்ள, பி.எம். டபிள்யூ எபிஷியன்ட் டைனமிக்ஸ் தொழில்நுட்பம், எரிபொருள் சிக்கனம் கிடைக்க வழி வகுக்கிறது. எடை குறைவான கட்டமைப்பு, தானியங்கி ஸ்டார்ட், ஸ்டாப் செயல்முறை, பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன், 50:50 என்ற எடை பகிர்ந்தளிப்பு போன்ற, புதுமையான தொழில்நுட்ப அம்சங்கள் கார் ஓட்டும் அனுபவத்தை சுகமாக்குகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|