பதிவு செய்த நாள்
28 மார்2014
16:52

மும்பை : இந்தவாரம் துவங்கியதில் இருந்து கடைசிநாளான இன்று(மார்ச் 28ம் தேதி) வரை தினமும் ஒரு புதிய உச்சநிலையை தொட்டுள்ளன இந்திய பங்குசந்தைகள். அதிலும் குறிப்பாக இன்று நிப்டி 6700 புள்ளிகளை தொட்டது.
கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, அந்நிய முதலீடுகள் அதிகரித்தது, வங்கி மற்றும் இதர பங்குகளின் விலை உயர்ந்ததால் பங்குசந்தைகள் இன்றும் உச்சத்தை தொட்டன. இன்றைய வர்த்தகநேர முடிவின்போது மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 125.60 புள்ளிகள் உயர்ந்து 22,339.97-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 54.15 புள்ளிகள் உயர்ந்து 6,695.90-ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 22,363.97- புள்ளிகளிலும், நிப்டி 6,702.60-புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 11 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் எஸ்.பி.ஐ., இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை நல்ல லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|