பதிவு செய்த நாள்
02 ஏப்2014
15:16
சமையல் காஸ் வர்த்தக சிலிண்டர் விலை, 163 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகம் (14.2 கிலோ) மற்றும் வர்த்தக பயன்பாடு (19 கிலோ) என, இரண்டு வகை சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அவ்வப்போது காஸ் சிலிண்டர் விலைகள் மாற்றம் செய்யப்படுகின்றன.
தொடர்ந்து உயர்ந்து வந்த, வர்த்தக சிலிண்டர் விலை, கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டு வருகிறது. சென்னையில், வர்த்தக சிலிண்டர் விலை, 163 ரூபாய் குறைத்து, 1,828.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த மார்ச் மாதம், 1,991 ரூபாயாக இருந்தது. மானியம் அல்லாத சிலிண்டர் விலை, 981 ரூபாய், மானிய சிலிண்டர் விலை, 401 ரூபாய் என்ற அளவில் உள்ளது. டில்லியில், 1,608 ரூபாய், மும்பையில், 1,711 ரூபாய், கோல்கட்டாவில், 1,687 ரூபாய் என்ற அளவில், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நிலவுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|