பதிவு செய்த நாள்
03 ஏப்2014
14:48

"வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லை என்பதற்காக, வங்கிகள் அபராத கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இது, தனியார் வங்கிகள் மத்தியில், பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அபராதத்தை கைவிடும் பட்சத்தில், இதர வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.
இது குறித்து எச்.டி.எப்.சி., வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆதித்ய பூரி கூறியதாவது: வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில், குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் இருந்தால், வங்கிக்கு, 400 ரூபாய் வருவாய் கிடைக்கும். இதன் மூலம் தான், வாடிக்கையாளருக்கு வங்கி கணக்கு பரிவர்த்தனை அறிக்கை, ஓராண்டிற்கான காசோலை, ஏ.டி.எம்., பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி அபராதம் வசூலிக்காவிட்டால், மேற்கண்ட சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த நேரிடும். இது, அபராதக் கட்டணத்தை விட அதிகமாக இருக்கும். வங்கிகளும் லாபகரமாக இயங்க வேண்டும். ஒருவரின் கணக்கில், குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால் தான், வங்கிக்கு இழப்பு ஏற்படாமல் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார். பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகள், அடிப்படை சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்பதற்காக, அபராதம் வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|