பதிவு செய்த நாள்
03 ஏப்2014
15:21

மஹிந்திரா நிறுவனம், பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவும் வகையில், ஒரு புதிய தொழில்நுட்பத்தை தங்களின் மேக்சிமோ மினி வேன் பள்ளிப்பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள, "சேப்ஐ' தொழில்நுட்பம், குழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டிற்கும் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்கிறது. பள்ளிப் பேருந்துகளில் இத்தொழில்நுட்பத்தை புகுத்தி இருப்பதால், பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் நிம்மதியடையலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தொழில்நுட்பம் வழங்கக்கூடிய பாதுகாப்பு அம்சங்கள் என்னென்னவென்று பார்ப்போம்.
ஜி.பி.எஸ்., தகவல் சேவை மூலமாக பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு, குழந்தைகள் வாகனத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்தில் இருக்கின்றனர் என்பது தெரியப்படுத்தப்படுகிறது. இதை அவர்கள் தங்களின் ஆன்ட்ராய்ட் போன் மற்றும் கணினி மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்த தொழில்நுட்பத்தினால் பெறக்கூடிய தகவல்கள் முறையே. வாகனம் இருக்கும் இடம் மற்றும் அதன் வேகம் குறித்த தகவல்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படுகிறது.ஏதேனும் விபத்து அல்லது மாற்று பாதையில் போக வேண்டியிருப்பின், அதைப்பற்றிய தகவல் 48 மணி நேரத்திற்கு சேமித்துக் கொள்ளக்கூடிய சிசிடிவி/ஸ்டில் கேமராவில் பதிவாகும் வீடியோ காட்சிகள் 3ஜி நெட்வொர்க் மூலம் பெறப்படும். மேக்சிமோ மின் வேன் விஎக்ஸ் பள்ளிப் பேருந்துகளுக்கான எல்லா பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாய் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மேக்சிமோ மினி வேன் விஎக்ஸ் பள்ளிப்பேருந்துகளில் மோனோகாக் சேனியுடன், தனித்தியங்கும் முன்புற சஸ்பென்ஷன் அதிர்வற்ற சொகுசான பயணத்தை வழங்குகிறது. வண்டி ஓடும் போது, குழந்தைகள் தெரியாமல் கதவை திறந்து விடாமல் இருக்க, "சைல்ட் லாக்' கொடுக்கப்பட்டுள்ளதும், ஜன்னலின் குறுக்குக்கம்பிகளும், தீயணைப்பு கருவிகள், அவசர உதவிக்கான சுத்தியல், முதலுதவிப்பெட்டி போன்றவைகளும், இதிலுள்ள மற்ற பாதுகாப்பு அம்சங்களாகும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|